மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் சேவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்

மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் சேவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்
X

மயிலாடுதுறை ரயில் நிலையம் முன் நடந்த கூட்டத்தில் மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில்சேவை துவங்க வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையேயான ரயில் சேவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை இரயில்வே சந்திப்பு முன்பு, மயிலாடுதுறை முதல் தரங்கம்பாடி வரை மீண்டும் ரயில் சேவையைத் தொடங்க வலியுறுத்தி விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம் தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில் ஏற்கனவே இயங்கி வந்த மயிலாடுதுறை- தரங்கம்பாடி ரயில்வே சாலையை மீண்டும் அமைக்க வேண்டும். ஆன்மீக தலமான திருக்கடையூர் மற்றும் டேனிஷ் கோட்டை அமைந்துள்ள தரங்கம்பாடி ஆகியவற்றிற்கு போக்குவரத்து வசதி ஏற்படும் வகையில் மீண்டும் அந்த ரயில் பாதையை அமைத்து, காரைக்கால் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ., ஜெகவீரபாண்டியன், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், விவசாய சங்க தலைவர் ஆறுபாதி கல்யாணம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் நிலைய மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி