மயிலாடுதுறை: மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

மயிலாடுதுறை: மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
X

மயிலாடுதுறை பகுதியில் சேதம் அடைந்த நெய்பயிர்களை விவசாய சங்க தலைவர் பார்வையிட்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாய சங்க தலைவர் கோரிக்கை வைத்து உள்ளார்.

மயிலாடுதுறையில் கடந்த வாரம் பெய்த பருவம் தவறிய கனமழையின் காரணமாக நீடூர், கொற்கை, சோழம்பேட்டை, மகாராஜபுரம், பாண்டூர், பொன்னூர், அருள்மொழிதேவன் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் சுமார் 25,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், இதையடுத்து, பாதிக்கப்பட்ட கிராமங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, அவரிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம் உள்ளிட்ட விவசாயிகள் மழையால் சேதடைந்த பயிர்களை காண்பித்து, தங்கள் வேதனையை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.சண்முகம் 'கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உரிய முறையில் கால்வாய்களை தூர்வாராத காரணத்தால் மழை நீர் வடியாமல் வயலுக்குள் புகுந்து பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை குறித்த காலத்தில் துவங்கினால் இதைவிட மோசமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, தமிழக அரசு அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரமும், நட்ட பயிர்கள் அழுகி மீண்டும் மறுபயிர் செய்ய வேண்டிய நிலையில் உள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும். பொதுப்பணித்துறையினர் வாய்க்கால்களை தூர்வாரும்போது, ஏற்கெனவே இருந்த அதே அளவுக்கு, அதே ஆழம், அகலத்துக்கு தூர்வார வேண்டும். மாறாக தூர்வாருதல் என்ற பெயரில் பணத்தை கொள்ளையடிக்கும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றார்.


Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !