மயிலாடுதுறை தே.மு.தி.க. வேட்பாளர் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை தே.மு.தி.க. வேட்பாளர் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
X

மயிலாடுதுறையில் தே.மு.தி.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை தே.மு.தி.க. வேட்பாளர் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டில் போட்டியிடும் மாவட்ட தே.மு.தி.க. துணைச் செயலாளர் கனிமொழி முருகன் வீடு வீடாக சென்று மகளிர் அணியுடன் முரசு சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

முரசு சின்னத்தில் என்னை வெற்றி பெறச் செய்தால் மேல ஒத்த சரகில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலை சரி செய்யப்படும் அனைத்து பகுதிகளிலும் குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தி தருவேன் சந்திரகுலதெருவில் தரமான சிமெண்ட் சாலை அமைத்து தருவேன் மேலும் அப்பகுதியில் பல வருடங்களாக பாதாள சாக்கடை யால் வழிந்தோடும் கழிவுநீரை நிரந்தரமாக அகற்றுவதற்கு முழு முயற்சி எடுப்பேன்,பிள்ளையார் கோயில் படித்துறை கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். நிகழ்வில் இளவரசி, சித்ரா, ரேவதி, ஹேமா உள்ளிட்ட கழக மகளிரணி நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!