எல்லை வாய்க்கால் தூர்வாராததால் தொல்லை - நீரில் மூழ்கிய பயிர்கள்

எல்லை வாய்க்கால் தூர்வாராததால் தொல்லை - நீரில் மூழ்கிய பயிர்கள்
X

மழை நீரில் மூழ்கிய பயிர்களை, சோகத்துடன் காட்டும் விவசாயிகள். 

மயிலாடுதுறை அருகே, தொடர் மழையால் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள், மூன்றாவது முறையாக நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னூர், பாண்டூர், மகாராஜபுரம், அருண்மொழிதேவன் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிய வழியின்றி, 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

கடந்த மழையின்போது மூழ்கிய பயிர்களை தண்ணீரை வடிய வைத்து, உரங்களை இட்டு காப்பாற்றிக் கொண்டிருக்கையில், தற்போது மூன்றாவது முறையாக நீரில் மூழ்குவதால் பயிர்களில் விளைச்சல் குறைந்து பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இப்பகுதிக்கு வடிகால் வாய்க்காலாக விளங்கும் எல்லை வாய்காலை, பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததே இதற்கு முக்கிய காரணம் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே எல்லை வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா