மயிலாடுதுறை: நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை: நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க கோரி ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறை அருகே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை அருகே நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து பெருஞ்சேரி, கிளியனூர், கடக்கம்,பெரம்பூர், சங்கரன்பந்தல் மார்க்கமாக திருவிடைக்கழிவரை 31- ம் எண் அரசுப்பேருந்து இயங்கி வந்தது. இந்த பேருந்து கடந்த 2018ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பயணம் செய்த பள்ளி, கல்லூரி, மாணவ - மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றியக்குழு உறுப்பினர்விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேருந்தை மீண்டும் இயக்ககோரி தமிழக அரசை கண்டித்து முழக்கமிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன், மயிலாடுதுறை போக்குவரத்து கழக மேனேஜர் ராமமூர்த்தி மற்றும் பெரம்பூர் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த பேருந்து இயக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்