மயிலாடுதுறையில் கீழே கிடந்த கைப்பையை ஒப்படைத்த தம்பதியருக்கு பாராட்டு
மயிலாடுதுறையில் தவறவிட்ட பையை எடுத்து ஒப்படைத்த தம்பதியினருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாணிக்க பங்கு கிராமத்தை சேர்ந்த ஜாய் இரத்தினசாமி என்பவரது மனைவி சுமதி (35). இவர் இன்று மயிலாடுதுறையில் வசிக்கும் தனது தங்கை முத்துலட்சுமியுடன் ஜவுளி எடுப்பதற்காக மயிலாடுதுறை கடைவீதிக்கு சென்று உள்ளார். பெரிய கடை வீதியில் செல்லும்போது சுமதி கைப்பை தொலைந்துபோனது. அதில் 3 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் செல்போன் இருந்துள்ளது.
கைப்பையை தேடியும் கிடைக்காமல் இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பெரிய கடை வீதியில் கீழே கிடந்த கைப்பையை எடுத்த வில்லியநல்லூர் சேர்ந்த சேகர் -மாலதி தம்பதியினர் கைப்பையில் உள்ள செல்போன் மூலம் கைப்பையை தொலைத்தவர்களிடம் தகவல் தெரிவித்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு வந்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினர். தொடர்ந்து அந்த கைப்பையை மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வத்திடம் தம்பதியினர் ஒப்படைத்தனர்.
கீழே கிடந்த பொருளை எடுத்துச் செல்லாமல் உரியவரிடம் ஒப்படைக்கும் மனிதநேயமிக்க செயலை செய்த தம்பதியினரை காவல்துறையினர் பாராட்டினர். இதுபோல் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் ஒவ்வொருவரும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டு கைப்பையை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu