மயிலாடுதுறையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் பருத்தி ஏல விற்பனை தீவிரம்

மயிலாடுதுறையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் பருத்தி ஏல விற்பனை தீவிரம்
X

மயிலாடுதுறையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் பருத்தி ஏல விற்பனை தீவிரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் பருத்தி குவிண்டாலுக்கு அதிகபட்சமாக 7236 ரூபாய்க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருத்தி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட பருத்தி, விவசாயிகளால் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் நடத்தப்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு எடுத்து வரப்படுகின்றன.

இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார்கோயில் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உள்ளன. மயிலாடுதுறையில் இந்த ஆண்டிற்கான பருத்தி ஏலம் 3வது வாரமாக நடைபெற்றது. விவசாயிகள் கொண்டு வரும் பருத்தியை, கோவை, திருப்பூர், ராஜபாளையம், விழுப்புரம் விருதுநகர் பகுதிகளைச்சார்ந்த வியாபாரிகள்; நேரில் வந்து மறைமுக ஏலத்தில் விலை நிர்ணயம் செய்து, வாங்கிச்செல்கின்றனர்.

இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் 7236ரூபாய்க்கும் குறைந்த பட்சம் 5311 ருபாய் விலை போனது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பருத்தி அதிக விலைக்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்த வாரத்தில் மயிலாடுதுறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 1700 குவிண்டால் கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!