41 நாட்களுக்கு பின் மயிலாடுதுறைல் மீண்டும் கொரானா தொற்று பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் 41 நாட்களுக்கு பிறகு, மீண்டும் கொரானா பாதிப்பு.
தமிழ்நாட்டில் கொரனா தொற்று 3வது அலை ஓய்ந்த பின்பு, நோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி முதல் நோய்த்தொற்று யாருக்கும் ஏற்படாத நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த தலா ஒரு நபர்களுக்கு நோய்தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு கடந்த மார்ச் 5 ஆம் தேதி ஒருவருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது.
இந்நிலையில் கடந்த 41 நாட்களாக யாருக்கும் நோய்த்தொற்று ஏற்படாத நிலையில், தமிழ் நாட்டிலேயே முதல் முதலில் கொரனா தொற்று நீண்டகாலம் இல்லாத மாவட்டமாக மயிலாடுதுறை விளங்கி வந்தது. இந்நிலையில், நேற்று 16ஆம் தேதி பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், ஒருவருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 26,497 பேர் கொரனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் கொரனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட அதை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu