மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக மயிலாடு துறை மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா முன்னிலையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாநில சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குனர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு பேசியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஒன்றியத்திற்குட்பட்ட 406 ஊராட்சிகள், இரண்டு நகராட்சிகளில் 22 இடங்கள், நான்கு பேரூராட்சிகளில் 24 இடங்கள்;, 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 மருத்துவமனைகள், 10 நடமாடும் கொரோனா தடுப்பூசி குழுக்கள் மூலம் மொத்தம் 499 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
முகாமில், 364 செவிலியர்கள், 114 மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சுகாதாரத்துறை இணை இயக்குநர் (சென்னை) விஜயலெட்சுமி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரதாப் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu