தரங்கம்பாடியில் பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

தரங்கம்பாடியில் பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
X

தரங்கம்பாடியில் பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தரங்கம்பாடியில் நடைபெற்ற பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தரங்கம்பாடியில் நடைபெற்ற பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 480 பள்ளி கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு. 10 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற போட்டியில் மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவி முதலிடம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ளாததால் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் பின்தங்கியுள்ளது. பொதுமக்கள் தடுப்பூசியை போட்டுகொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தரங்கம்பாடியில் உள்ள தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் இன்று காலை பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் உள்ள 11 கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பயிலும் 480 மாணவிகள் பங்கேற்றனர். மாரத்தான் போட்டியை தூய தெரசா கல்லூரியின் செயலர் அருள்சகோதரி கருணா ஜோசப்பாத், முதல்வர் காமராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கேசவன் பாளையத்தில் தொடங்கிய போட்டியானது எருக்கட்டாஞ்சேரி, ஒழுகைமங்கலம், ஒழுகைமேட்டுப்பாளையம், பொறையார், ராஜூவ்புரம், தரங்கம்பாடி வழியாக பத்து கிலோமீட்டர் தூரம் கடந்து மீண்டும் துவங்கிய இடத்திலேயே முடிவடைந்தது.

மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரியை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி கீதாஞ்சலியும் இரண்டாமிடத்தை அதே கல்லூரியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவி ரஞ்சனியும், மூன்றாம் இடத்தை நாகை ஏடிஎம் சி கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி காளீஸ்வரியும் பெற்றனர். முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு முறையே ரூ 20 ஆயிரம், ரூ 15 ஆயிரம் ,ரூ 10 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன.

தொடர்ந்து 4 முதல் 20 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ500 ஆறுதல் பரிசும் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டியை முன்னிட்டு வழி நெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!