கொரோனா சிகிச்சை மையங்களை அமைச்சர் ஆய்வு செய்தார்
சீர்காழியில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களை மாண்புமிகு சுற்றுசூழல் ,காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் , விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் .சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு செய்தார்
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் முழு ஊரடங்கு அறிவித்தார். இதன்காரணமாக சிகிச்சைக்காக வெளியூர்களுக்கு சென்றவர்கள் மற்றும் வெளியூர்களில் பணியாற்றுபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பும் வகையில் அரசு அளித்த இரண்டு நாள் தளர்வு என்பது மனிதாபிமான அடிப்படையில் முதல்வர் வழங்கியது. கொரோனா தொற்று காரணமான ஊரடங்கை இன்று விமர்சனம் செய்தவர்கள் ஒரு வாரத்திற்குபின் பாராட்டுவார்கள். இந்த அளவிற்கு கடுமையான ஊரடங்கு என்பது உலகத்திலேயே முதன்முறையாக தமிழகத்தில் மட்டும் தான் அமல்படுத்தபட்டுள்ளது.
சீர்காழி அரசு மருத்துவமனையில் விரைவில் தற்காலிக மருத்துவர்கள்,செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் தேவையான அளவு பணியமர்த்தபடுவார்கள் எனவும் தெரிவித்தார்.இந்தஆய்வின்போது மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் ராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu