மயிலாடுதுறையில் கொரோனா பரிசோதனைக்கு வந்த பெண் மயங்கி விழுந்து பலி

மயிலாடுதுறையில் கொரோனா பரிசோதனைக்கு வந்த பெண் மயங்கி விழுந்து பலி
X
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்டு 264 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் தினந்தோறும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மருத்துவமனைக்கு உறவினர்களுடன் வந்த வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை ஒப்பந்த பணியாளர் ஒருவர் உறவினர்கள் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்றார்.

மருத்துவர் பரிசோதனை செய்ததில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். உடனடியாக உறவினர்கள் அவரது உடலை அமரர் ஊர்தியில் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மயிலாடுதுறை அருகே வழுவூர் வானவராயன் குப்பத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பதும் உறவினருடன் கொரோனா பரிசோதனை செய்துகொள்வதற்காக மருத்துவமனைக்கு வந்தபோது மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது. கொரோனா நோயாளி இறந்து கிடப்பதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!