மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா

மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா
X

மயிலாடுதுறை கல்லூரியில் ஒரு மாணவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மயிலாடுதுறை அரசு மகளிர் கலைக்கல்லூரியில்,5 மாணவிகளுக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டதால் 5 நாள் விடுமுறை விடப்பட்டது.

மயிலாடுதுறையில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில், நேற்று வெளியூரில் இருந்து வந்த 5 மாணவிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களுக்கும், அவரது தோழிகள், வகுப்பு மாணவிகள் ஆசிரியர்கள் என 369 நபர்களுக்கு கொரோன பரிசோதனை செய்யப்பட்டது.

2500 மாணவிகள் பயின்றுவரும் கல்லூரி என்பதால் நிர்வாகமும் சுகாதாரத்துறையும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 5 தினங்கள் கல்லூரிக்கு விடுமுறை அளித்து 4 நாட்களுக்கு பாடங்களை ஆன்லைன் வகுப்பு மூலம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டு இன்றுமுதல் ஆன்லைன்மூலம் வகுப்பு எடுக்கப்பட்டுவருகிறது.

ஞாயிறுவரை கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மயிலாடுதுறையில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் கிளை ஒன்றில் ஆசிரியை ஒருவருக்குக் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது, உடனடியாக அவர் வகுப்பில் உள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Tags

Next Story
ai healthcare products