மயிலாடுதுறை நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்.

ஊதியம் வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறை நகராட்சியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்
மயிலாடுதுறை நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து 2-வது நாளாக பணிகளை புறக்கணித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பிப்ரவரி மாதம் சம்பளம் வழங்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இவற்றில் 80க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக தூய்மைப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.340 வழங்கப்படும் நிலையில் அதில் ரூ.10 சேமநல நிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி மாத சம்பளம் அவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து நேற்று மயிலாடுதுறை நகராட்சி வரதாச்சாரியார் பூங்காவில் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிப்ரவரி மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், சம்பள பில் வழங்க வேண்டும், சேமநலநிதி பிடிமானம் செய்யப்பட்டதற்கான கணக்கு தர வேண்டும், பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றுகாலை ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நகராட்சி நிர்வாகத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பணிக்குத் திரும்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu