மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் 41 கால்நடைகள் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் 41 கால்நடைகள் உயிரிழப்பு
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழையால் வீடுகள் இடிந்தன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் 41கால்நடைகள் உயிரிழந்தன. வீடுகள் இடிந்து விழுந்தன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24மணிநேரத்தில் 130 மி.மீ. கனமழை இடைவிடாது கொட்டி தீர்த்தது. மழையால் ஆறுகளில் வெள்ளநீரை கரைபுரண்டு ஓடுவதால் வயல்களில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கனமழையால் மாவட்டத்தில் 21 மாடுகள், 20 ஆடுகள் என 41 கால்நடைகள் இறந்துள்ளன. 65 கூரைவீடுகள் பகுதியாகவும், 4 கூரைவீடுகள் முழுவதுமாகவும், 21 ஓட்டுவீடுகள் பகுதியாகும், ஒரு மாடிவீடு பகுதியாகவும் சேதமடைந்துள்ளது. வீடுகள் மற்றும் கால்நடை இறந்ததற்கு பாதிக்கப்பட்டோருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai future project