மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழையால் விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும்  தொடர்மழையால் விவசாயிகள் கவலை
X

மயிலாடுதுறையில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மங்கைநல்லூர், மணல்மேடு, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை மற்றும் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே கனமழையால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடர்மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மயிலாடுதுறையில் பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!