புதிய சாலை அமைக்கும் பணி, மாநில தரக் கண்காணிப்பாளர் ஆய்வு

புதிய சாலை அமைக்கும் பணி, மாநில தரக் கண்காணிப்பாளர் ஆய்வு
X
மயிலாடுதுறை அருகே நடைபெற்று வரும் புதிய சாலை அமைக்கும் பணியை மாநில தரக் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை ஒன்றியம் அகரகீரங்குடி முதல் முட்டம் வரை 3 கி.மீ தொலைவுக்கு ரூ.3.60 கோடி மதிப்பீட்டில்; சாலை விரிவுபடுத்துதல் மற்றும் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

தற்போது சாலை விரிவாக்கம் செய்து கிரேட் 2 மற்றும் கிரேட் 3 பணிகள் முடிந்துள்ளது. இந்நிலையில் சாலைப் பணிகள் தரமானதாக நடைபெற்று வருகிறதா? பணிகளை மேற்கொண்டு தொடரலாமா என்பது குறித்து மாநில தர கண்காணிப்பாளர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி செல்வம் தலைமையில் தர மதிப்பீடு குழவினர் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

அகரகீரங்குடியில் இருந்து முட்டம் வரை செல்லும் பாதையில் பல்வேறு இடங்களில் சாலையில் சிறுபள்ளங்கள் தோண்டி தர ஆய்வு மேற்கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்