பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்

பெட்ரோல்,  டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்
X

சீர்காழியில், விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியினர். 

சீர்காழியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு நீதி கேட்டும், காங்கிரஸ் கட்சியினர் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், காங்கிரஸ் கட்சி சார்பில், பெட்ரோல், டீசல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி கேட்டும், விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு, மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய நடைபயணம், முக்கிய வீதிகள் வழியே கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு, 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க, புதிய பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களான மளிகை மற்றும் காய்கறி விலைகள் உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் சிலிண்டர் விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தொடர் கண்டன கோஷங்களை காங்கிரஸ் கட்சியினர் எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!