பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ்   போராட்டம்
X

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து மயிலாடுதுறையில்காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டி எதிர்ப்புப் போராட்டம்.

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து, மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டி எதிர்ப்புப் போராட்டம்.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்வதாக நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையொட்டி இன்று மாநிலம் முழுவதும் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து அறவழி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் தலைமை நேற்று அறிவித்தது.

அதன்படி மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று வாயில் வெள்ளை துணியை கட்டி நின்றவாறு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டியவாறு நகர காங்கிரஸ் அலுவலகமான காமராஜர் மாளிகை முன்பு நின்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!