குத்தாலம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார்

குத்தாலம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார்
X

போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த கார்த்திகேயன்.

குத்தாலம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழந்தூர் நெல்லியடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா ஆண்டுதோறும் ஊர்மக்கள் ஆலோசனைக்கேட்டு அதன்படி நடக்கும். ஆனால் இந்த ஆண்டு ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ராஜாஜி மக்களிடம் ஆலோசனை நடத்தாமல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதையடுத்து, இந்த விழாவை நிறுத்த தேரழந்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் குத்தாலம் வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி கடந்த 14-ஆம் தேதி திருவிழா காப்புகட்டும் நிகழ்ச்சிக்கு தடைவிதித்து வட்டாட்சியர் ஆணை பிறப்பித்ததை குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி, தீமிதி விழாவுக்கான காப்பு கட்டும் உற்சவம் முடிந்தபிறகு நோட்டீசை வழங்கியுள்ளார். மேலும், இதுதொடர்பாக கார்த்திகேயன் மீது பொய் வழக்குப் பதிந்ததாக கூறப்படுகிறது.

தன்மீது பொய்வழக்கு பதிந்ததாக குற்றம்சாட்டி காவல் ஆய்வாளர் வள்ளி, உதவி ஆய்வாளர் மங்களநாதன், சிறப்பு பிரிவு ஆய்வாளர் சதீஷ் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்திகேயன் மனு அளித்திருந்தார். இந்த மனு குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை இயக்குநருக்கு முன்னதாக காரத்திகேயன் கோரிக்கை அளித்து இருந்தார். ஆனால் காவல்துறை இயக்குநர் நடவடிக்கை எடுக்காததால் அவரை பிரதிவாதியாக இணைத்து, அவர் நடவடிக்கை எடுக்க கட்டளையிடும்படி உயர்நீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்து இருந்தார். இருதரப்பினரின் வாதங்களை கேட்ட நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மனுதாரருக்கு காவல் கண்காணிப்பாளருக்கு புதிய கோரிக்கை மனு அளிக்குமாறு அறிவுறுத்தி, மனு அளித்த இரண்டு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு மனு விசாரணையை முடித்து வைத்தார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த கார்த்திகேயன் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்மீது குத்தாலம் காவல் ஆய்வாளர் அடுத்தடுத்து பல பொய் வழக்குகளை பதிந்து, குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யும் அளவிற்கான சட்டவிரோதமாக பொய்வழக்குகளை போட்டுள்ளதாகவும், இதுகுறித்து காவல்துறை உயர்அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இதுகுறித்து விசாரணை செய்து பொய்வழக்குகள் பதிவிடும் குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி உள்ளிட்டோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!