மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்

மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்
X

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் (பைல் படம்)

மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை சீர்காழி ஆகிய இரண்டு நகராட்சிகளும் தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில், குத்தாலம், மணல்மேடு ஆகிய நான்கு பேரூராட்சி பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா மற்றும் தேர்தல் அசம்பாவிதங்களை தடுக்கவும் அமைக்கப்பட்ட 18 தேர்தல் பறக்கும் படைகள் சுழற்சி முறையில் தீவிர ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சியில் பல்வேறு இடங்களில் வாக்காளர்களிடம் வாக்குகளை பெறுவதற்காக பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த காட்சிகள் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர் 30 வது வார்டில் சார் பதிவாளர் பன்னீர்செல்வம் தலைமையில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பணம் ஒன்றும் சிக்கவில்லை. பணப் பட்டுவாடா செய்யும் வீடியோ பதிவு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள பல்வேறு வார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு