மயிலாடுதுறை மாவட்டம் ஆத்துப்பாக்கத்தில் மூலிகை செடி ஆர்வலரின் சமூக சேவை
தான் வளர்த்து வரும் மூலிகை செடிகளின் மத்தியில் பாலகுரு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சி ஆத்துப்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் பாலகுரு. இவர் எலக்டீசியனாக உள்ளார். குறைந்த வருவாய் இருந்தும் ஏழ்மை நிலையிலும் இவர் சிறு வயது முதல் மூலிகை செடிகள், கீரை வகைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர். இதற்காக தனது வீட்டில் சிறு இடத்திலும் ஏராளமான மூலிகை செடிகள் குறிப்பாக வால்லாரை கீரை, நாட்டு வெற்றிலை, மிளகு, திப்பிலி, லவங்கம், பெரியநங்கை, சிறியநங்கை, கருந்துளசி, மென்டோஸ், தூதுவ லை, நொச்சி, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் மற்றும் முளைக்கீரை, பசலை கீரை, பொன்னாங்கன்னி, அரைக்கீரை அகத்திகீரை உள்ளிட்ட பல கீரை வகைகள் மற்றும் கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரை, சுண்டைக்காய், மனத்தக்காளி மற்றும் பல வகை அழகு செடிகளையும் வளர்த்து வருகிறார்.
இதனை பாலகுரு இயற்கை உரங்கள் வைத்து வளர்த்து வருகிறார். மேலும் இவரிடம் மூலிகை, கீரை, காய்கறிகள் கேட்பவர்களுக்கு தானே தேடி சென்று இலவசமாகவும் வழங்கி வருகிறார். சிறு வயது முதலே மூலிகை செடி வளர்ப்பு தோட்டக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டதாகவும் இதற்காக நாள்தோறும் நேரம் ஒதுக்கி வருவாயில் சில தொகையை செலவிட்டு இதில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். பலர் இவர் வளர்க்கும் மூலிகை செடிகளை காண வரும் போது அவர்களுக்கும் செடிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu