மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 3 சட்டமன்ற  உறுப்பினர்களுக்கு பாராட்டு  விழா நடைபெற்றது

தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் தமிழக முதல்வருக்கும் பாராட்டு தெரிவித்தனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்ற ௩ பேருக்கும், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும்‌ வெற்றிக்கு இரவு பகல் பாராது அயராது உழைத்த நிர்வாகிகளுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

அந்த வகையில், மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் தலைமையில் மணல்மேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடக்கு ஒன்றிய செயல்வீரர்களுக்கு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோருக்கு பாராட்டப்பட்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டட மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற உறுதுணையாக இருந்து ஒற்றுமையாக உழைத்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் வலுவிழந்த தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் தமிழக முதல்வருக்கும் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து மாற்று கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இதில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!