மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் நிர்வாகத்தில் தலையிடும் தி.மு.க. ஒன்றியக்குழு தலைவரை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதி, ராதாகிருஷ்ணன், சக்தி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஆளும் தி.மு.கவினர் உள்ள ஊராட்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தும் ஆளும் கட்சி அல்லாத ஊராட்சிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததை கண்டித்தும், தி.மு.க. ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகளின் தலையீட்டின் பேரில் ஊராட்சி நிதிகளை வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊராட்சி வேலை உறுதி திட்டத்தில் பணிதள பொறுப்பாளர்களை அரசியல் காழ்ப்புணர்சி காரணமாக மாற்றம் செய்வதை கண்டித்தும், இந்த புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன உரையாற்றி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாசிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

Tags

Next Story