மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில்  குறை தீர்க்கும் நாள் கூட்டம்
X
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகலத்தில் கலெக்டர் லலிதா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்பஅட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா, முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 82 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர்.

பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்டஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் பயனாளி ஒருவருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!