சீர்காழியில் கலெக்டர் திடீர் ஆய்வு - பணிகளின் தரம் குறித்து மதிப்பீடு
சட்டநாதபுரத்தில் சாலைப்பணிகளை ஆய்வு செய்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் லலிதா, இன்று ஆய்வு மேற்கொண்டார். சட்டநாதபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்ற ஆட்சியர், அங்கு குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
அங்குள்ள வடக்கு தெருவில், 5 லட்சம் மதிப்பில், பொது நிதியின் கீழ் போடப்பட்டுள்ள சாலையை ஆய்வு செய்து, அளவீடு செய்யப்பட்ட அளவில் சாலைகள் போடப்பட்டுள்ளதா என, தோண்டிப் பார்த்து ஆய்வு செய்தார். சீர்காழி வேளாண்மை அலுவலகத்திற்கு சென்ற ஆட்சியர், பின்னர், திட்டை ஊராட்சியில் உள்ள பெரியவர்களுக்கான மனநல மறுவாழ்வு மையத்தை பார்வையிட்டு மனநிலை காப்பாளரிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, திட்டை ஊராட்சியில், ரூ.1.50 லட்சம் மதிப்பில் மத்திய நிதிக்குழு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பை தொட்டிகளின் பணிகளை பார்வையிட்டார். ஆய்வின் போது, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கஜேந்திரன், அருள்மொழி, திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தக்ஷிணாமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu