மயிலாடுதுறை அருகே நெகிழி கழிவு மேலாண்மை அலகில் கலெக்டர் லலிதா ஆய்வு
மயிலாடுதுறை அருகே நெகிழி கழிவுகள் மறுசுழற்சி அலகினை மாவட்ட ஆட்சியர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் முடிகண்டநல்லூர் ஊராட்சியில் நெகிழி கழிவு மேலாண்மை அலகு கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கி செயல்பட்டு வருகிறது. நெகிழிப்பொருட்கள் பயன்பாட்டுக்குப் பின்னர் தூக்கி வீசப்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து பிரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பெறப்பட்டு மறுசுழற்சி செய்து, தார்சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முடிகண்டநல்லூர் நெகிழி கழிவு மேலாண்மை அலகு முடிகண்டநல்லூர் செவ்வந்தி மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1 மாதத்துக்கு ஒரு டன் பிளாஸ்டிக் குப்பைகள் இங்கு மறுசுழற்சி செய்த குழுவினர் முதல்முறையாக ஒருகிலோ நெகிழியை தரம் பிரித்து கொடுப்பவர்களுக்கு 10 ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலம் மயிலாடுதுறை நகராட்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் நெகிழி குப்பைகளை சேகரித்தனர்.
அரைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் ஊரக பகுதியில் சாலை அமைக்கும் ஒப்பந்தக்காரர்களிடம் ரூபாய் 35க்கு விற்பனை செய்கின்றனர். தற்போது வரை 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் லாபமடைந்துள்ளனர். இந்த நெகிழி கழிவு மேலாண்மை அலகிற்கு மாவட்ட ஆட்சியர் லலிதா இன்று செய்தியாளர்களுடன் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் லலிதா கூறுகையில் சுற்றுசூழலை பாதிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று இங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளோம். மறுசுழற்சி செய்யப்படும் நெகிழி தார்ச்சாலை அமைக்க பயன்படுத்தப்படுகிறது. அரைக்கப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் ரூ.35-க்கு ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும் ஒப்பந்ததார்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடன்வாங்கி ஆரம்பிக்கப்ட்ட இம்மையம் தற்பொது லாபகரமாக இயங்கி வருவதாகவும் நிர்வகிக்கும் சுயஉதவிக்குழுவினரை பாராட்டினார். நெகிழி கழிவுகளை சேகரிப்பது குறித்தும் மறுசுழற்சி செய்யும் முறைகளை ஆட்சியரிடம் செய்து காண்பித்து விளக்கமளித்த மகளிர் சுயஉதவிக்குழுவினர், குழு உறுப்பினர்களுக்கு தினசரி வேலை கிடைப்பதாகவும், வாய்ப்பு ஏற்படுத்தி தந்த தமிழக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu