அரசு பேருந்தில் பயணித்தார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா

அரசு பேருந்தில் பயணித்தார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா
X
பஸ்சில் பயணித்தார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தனது பங்களாவில் இருந்து அலுவலகத்திற்கு அரசு பஸ்சில் பயணித்தார்.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் திங்கட்கிழமை ஒருநாள் அரசு அதிகாரிகள் வாகனங்களை பயன்படுத்தாமல் சைக்கிளில், நடந்து அல்லது பொதுப் பேருந்தில் அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அந்த உத்தரவின்படி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இன்று தனது வீட்டிலிருந்து நடந்து பேருந்து நிறுத்தம் சென்று அங்கு இருந்து அரசு பேருந்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வருகை புரிந்தார். சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கீழ நாஞ்சில்நாடு பகுதியில் உள்ள ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்து, மாவட்ட ஆட்சியர் லலிதா 3 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசுப் பேருந்தில் வந்தடைந்தார்.

அவர் மகளிருக்கான விலையில்லா பேருந்து பயணத்திட்டத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தார். பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்த மாவட்ட ஆட்சியர் கீழவீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடைபயணமாக வந்து சேர்ந்தார்.

மாவட்ட ஆட்சியரோடு ஆண் அதிகாரிகளும் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்து வந்தடைந்தனர். வாரத்தில் ஒருநாள் இதுபோல் அனைத்து அதிகாரிகளும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அப்போது மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!