மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் பற்றி கலெக்டர் பேட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் பற்றி கலெக்டர் பேட்டி
X

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் பற்றி கலெக்டர் லலிதா பேட்டி அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள நான்கு பேரூராட்சி வாக்கு எண்ணும் மையமான டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறையில் பாதுகாப்பு வசதிகள், சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்தப்பட்டிருப்பதை பார்வையிட்டு போலீசாருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகளுக்கும், மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளுக்கும் நாளை நடைபெறும் வாக்கு பதிவிற்காக 177 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 51 மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமாக உள்ள மையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மைக்ரோ அப்சர்வர்கள், போலீஸ் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இந்த தேர்தலில் 854 அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்குப் பெட்டிகள் வைப்பதற்காக ஸ்ட்ராங் ரூம் மயிலாடுதுறை நகராட்சி மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியிலும், நான்கு பேரூராட்சிகளின் வாக்குபெட்டிகள் டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலை பள்ளியிலும், சீர்காழி நகராட்சிக்கு சீர்காழி சபாநாயகர் முதலியார் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பு அறையில் வாக்குப்பெட்டிகள் வைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

பாதுகாப்புகளை சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்தவித ஐயப்பாடும் இல்லாமல் சி.சி.டி.வி. காட்சிகளை பார்வையிட்டுக் கொள்ளலாம். பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் அசம்பாவிதங்களை தடுக்கும் நடவடிக்கையாக 18 தேர்தல் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ரூ. 40 லட்சத்திற்கும்மேல் பொருட்கள் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags

Next Story
ai healthcare products