மயிலாடுதுறை: நேபாளம் கோகோ போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வரவேற்பு

மயிலாடுதுறை: நேபாளம் கோகோ போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வரவேற்பு
X
சர்வதேச கோ கோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள் அதன் பயிற்சியாளருடன் உள்ளனர்.
நேபாளத்தில் நடந்த கோகோ போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு மயிலாடுதுறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேபாள நாட்டில் கடந்த 26ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை சர்வதேச அளவிலான இந்தோ-நேபால் இளையோர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்தியா , நேபாளம் , வங்கதேசம் , பூட்டான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றனர். இந்த போட்டிகளின் ஒரு பகுதியாக கோ கோ போட்டி நடைபெற்றது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 அணிகள் கோகோ போட்டியில் பங்கேற்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்ற போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் நேபாள் அணியும் மோதின. இந்திய அணி சார்பில் மயிலாடுதுறையை சேர்ந்த அல்ஹாஜ் பள்ளி மற்றும் ராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றது. தங்கம் வென்று ஊர் திரும்பிய மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!