தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தலைஞாயிறு  கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க கோரி  கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கு உள்ள ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலை மயிலாடுதுறை தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை மட்டும்தான். இந்த ஆலை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. ஆலை ஊழியர்களுக்கு 2வருடம் ஊதியம் வழங்கவில்லை.

ஆலை மூடப்பட்டதால் விவசாயிகள், தொழிலாளர்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே தமிழக அரசு மூடப்பட்டுள்ள ஆலையை புனரமைத்து கரும்பு அரவை துவக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் பேரணியாக வந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரும்பு விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் காசிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டு ஆலையை திறக்க கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்