தரங்கம்பாடியில் டேனிஸ் கோட்டை மூடல்

தரங்கம்பாடியில் டேனிஸ் கோட்டை மூடல்
X
கொரோனா பரவலைத் தடுக்க மயிலாடுதுறை தரங்கம்பாடியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க டேனிஸ் கோட்டை மூடப்பட்டது.

கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியாக தமிழக அரசு சுற்றுலாத்தலங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றை மூட உத்தரவிட்டதை அடுத்து, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டையும், அதனுள் இயங்கி வரும் தொல்லியல் அருங்காட்சியகமும் இன்று மூடப்பட்டது.

400 ஆண்டுகளுக்கு முன்பு, தரங்கம்பாடிக்கு வாணிப நோக்கத்துடன் வந்த டேனிஷ்காரர்கள், கி.பி 1620ல், தரங்கம்பாடியை, இந்தியாவில் தங்களது வர்த்தக மையமாக அமைக்க முடிவு செய்தவுடன், அப்போது தஞ்சையை ஆண்ட விஜய ரகுநாத நாயக்கரிடம், தரங்கம்பாடியில் ஒரு துறைமுகத்தையும், டேனிஷ் கலை நுணுக்கத்துடன் ஒரு பாதுகாப்பு கோட்டையையும் அமைக்க அனுமதி பெற்றனர்.

கி.பி 1622-இல் கட்டி முடிக்கப்பட்ட அந்த பிரமாண்ட கோட்டை, இந்தியாவில் டேனிஷ் வர்த்தக மையத்தின் தலைமை பீடமாக அமைந்தது. இந்தக் கோட்டையில் தற்போது தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் இயங்கி வருகிறது.

டேனிஸ் கோட்டை, அருங்காட்சியகம் மற்றும் தரங்கம்பாடி கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். தற்போது கோட்டை மூடப்பட்டுள்ளதால், தரங்கம்பாடி கடற்கரை பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

கடலோர காவல் படை ரோந்து கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளதால், யாரும் வராமல் தடுக்க கடலோர காவல் துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!