மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் தூய்மை பணி விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் தூய்மை பணி விழிப்புணர்வு பேரணி
X

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில்  நடைபெற்ற தூய்மை பணி விழிப்புணர்வு பேரணி 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் தூய்மை பணி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் தூய்மை பணி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை கொடுக்கும் விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சி மன்றத் தலைவர் சுகுணா சங்கரி தொடக்கி வைத்தார். பொறையார் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி .பேரூராட்சி அலுவலத்தில் நிறைவடைந்தது. இதில் பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகள் குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பிச்சென்றனர். பேரணியில், பேரூராட்சி துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன், செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் இளங்கோவன் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ai in future agriculture