/* */

மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்

மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்
X

மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் சீர்காழி தாலுகா எருக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலையில் அரைக்கப்பட்டு, அந்த அரிசி மாவட்டம் முழுவதும் உள்ள 424 ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு 2 லட்சத்து 76 ஆயிரத்து 401 குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக பல்வேறு இடங்களில் பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தரமான ரேஷன் அரிசி வழங்கக்கோரி பொது மக்களும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தில் கடந்த 8 மாதங்களாக தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமாரிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றிரவு சித்தமல்லி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு அரிசி ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை மற்றும் போலீசார் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இன்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 20 Jan 2022 9:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு பேபியே..எங்கள் செல்லமே பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு சின்னக் கண்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    மீண்டும் 2011ஐ உருவாக்கி விடாதீர்கள் : கேரளாவிற்கு விவசாயிகள்...
  4. அரசியல்
    எதிர்க்கட்சியை என் எதிரியாக கருத வேண்டாம் : பிரதமர் மோடி
  5. ஸ்ரீரங்கம்
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
  7. நாமக்கல்
    விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை...
  8. தமிழ்நாடு
    பத்திரப்புதிவு துறையில் நிலம் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் பணி...
  9. ஈரோடு
    ஈரோட்டில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி
  10. சினிமா
    தக் லைஃப் படத்துக்காக... திரிஷாவின் புகைப்படங்கள் வைரல்..!