மழையால் சேதமடைந்த பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

மழையால் சேதமடைந்த பயிர்களை மத்திய குழுவினர்  ஆய்வு செய்தனர்.
X

வெள்ள சேதம் குறித்த புகைப்படங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர் 

சீர்காழியை அடுத்த புத்தூரில் மத்திய குழு ஆய்வு மழையால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 10 தினங்களாக பெய்து வந்த நிலையில் விளைநிலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில் மத்திய அரசு வெள்ள சேதத்தை மதிப்பீடு செய்ய மத்திய குழுவை அனுப்பியது

இந்தக் குழுவானது இரண்டாக பிரிந்து தமிழகத்தில் ஆய்வை மேற்கொண்டது. மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான ஒரு குழுவினர் நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பாண்டிச்சேரியிலும் ஆய்வு மேற்கொண்டனர். இரண்டாம் நாளான இன்று கடலூரில் ஆய்வைத் தொடங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதிகளில் மாதிரவேளூர், சோதியக்குடி, ஆச்சாள்புரம் நல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தொடர்மழையால் பாதிப்புக்குள்ளான விளைநிலங்கள், பயிர்கள், வீடுகள் மற்றும் கால்நடைகள் குறித்த புகைப்படங்கள் புத்தூரில் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. சேதங்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் சேதம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தை பார்வையிட்டனர்.

இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் லலிதா சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்