மயிலாடுதுறை, வானாதி ராஜபுரம் கோசாலையில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

மயிலாடுதுறை, வானாதி ராஜபுரம் கோசாலையில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்
X

மயிலாடுதுறை அருகே  வானாதி ராஜபுரம் கோசாலையில் நடந்த மாட்டுப்பொங்கல்.

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வானாதி ராஜபுரம் கோசாலையில் ஆதரவற்ற மாடுகளுக்கு பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. உழவுக்கு உதவி செய்யும் உற்ற நண்பனாக விளங்கும், மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாளாக மாட்டுப்பொங்கல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு, கால்நடைகள், தண்ணீரில் குளிப்பாட்டப்பட்டு, மாலைகளால் அலங்கரித்து, பொங்கலிட்டு, மாடுகளுக்கு பூஜை செய்யப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த வானாதி ராஜபுரத்தில், கோசாலை அமைந்துள்ளது. ஆதரவற்று திரியும் மாடுகள், பால் அற்றுப்போய், அடிமாட்டிற்கு விற்கப்படும் மாடுகள், முதுமையடைந்த மாடுகள் உள்ளிட்ட ஆதரவற்ற மாடுகள் இங்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.

இங்கு 1008 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு கோபூஜை விழா நடைபெற்றது. மாடுகளை குளிப்பாட்டி நெட்டிமாலைகள் அணிவிக்கப்பட்டு மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் குறைந்த அளவில் வந்திருந்த பொதுமக்கள் மாடுகளுக்கு பூஜைசெய்து , உணவு அளித்து வழிபாடு நடத்தினர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil