மயிலாடுதுறை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து வேட்பாளர்கள் தேர்தலில் பணியாற்ற வேண்டிய வியூகம் குறித்து விளக்கம் அளித்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் கடந்த நான்கரை ஆண்டுகளில் எடப்பாடி பழனிச்சாமி அடிக்காத கொள்ளையே கிடையாது எனவும் , நான்கரை லட்சம் கோடி கடன் வாங்கி அதை சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டதாகவும் விமர்சித்தார். மக்கள் தி.மு.க.விற்கு கொடுத்துள்ள ஆதரவால் தற்போது அ.தி.மு.க.வினர் ஒதுங்கி நிற்பதாகும் அ.தி.மு.க.வினரே தி.மு.க.வினருக்கு ஓட்டு போடுவதற்கு தயாராக உள்ளார்கள் எனவும் தெரிவித்தார். நேற்று கர்நாடகாவில் நடந்த விவகாரம் நாளை தமிழ்நாட்டிற்கு வராது என்பதற்கு என்ன நிச்சயம் என கேள்வி எழுப்பினார் . இது போன்ற நிலை வராமலிருக்க மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென அமைச்சர் மெய்யநாதன் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் இளைய பெருமாள், பேரூர் கழக செயலாளர் விசுவநாதன் அவைத்தலைவர் சந்தானம், மாவட்ட துணைச்செயலாளர் கண்ணகி பன்னீர்செல்வம், மாவட்ட விவசாய தொண்டரணி அமைப்பாளர் மனோகரன் மற்றும் வேட்பாளர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கட்சி முகவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu