மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்கால்
நீரில் மூழ்கிய நெற்பயிரை காட்டும் விவசாயிகள்.
மயிலாடுதுறை அருகே உள்ள நல்லாடை கிராமத்தை சுற்றி 500 ஏக்கரில் தாளடி விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரில் இரண்டு பக்கங்களிலும் 2 வடிவாய்க்கால்கள் செல்கின்றன. மழைநீர் வடியவைக்கும் நண்டலாறு கடந்த 10 ஆண்டாக தூர்வாரப்படாமல் இருப்பதால் ஒருநாள்மழைபெய்தாலே வடிவாய்க்கால்மூலம் நண்டலாற்றில் நீரை வடியவைக்கமுடியாமல் எதிர்த்துக்கொண்டுவிடுகிறது. மழை காலத்தில் நல்லாடையின் மேற்குப் பகுதியில் உள்ள சேத்தூர், விளாகம், கொத்தங்குடி, அரசூல், மேலமங்கநல்லூர் பகுதியிலிருந்து வடிவாய்க்கால் நிரம்பிய மழைநீர் வயல்வழியே மிதந்து நல்லாடையை சுற்றியுள்ள 500 ஏக்கரில் நிரம்பி விவசாயத்தை மூழ்கடித்துவிடுகிறது. வடிவாய்க்கால்களான வெள்ளவாய்க்கால் மற்றும் கோனேரிவாய்க்கால்கள் 8கி.மீ தூரம் உள்ளது. இந்த வடிவாய்க்கால்கள் ஆங்காங்கே ஒருசிலர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் வடிவதில் மேலும் சிக்கலாகிவிடுகிறது.
ஏற்கனவே பெய்தமழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது பெய்தமழையால் மூழ்கிய பயிர்கள் தண்ணீரில் கரைந்துள்ளது. அரசு முறையாக கணக்கிடவேண்டும் என்றும் இப்பகுதிக்கு தீர்வாக வரும் ஆண்டில் நண்டலாற்றை முறையாக தூர்வாரவேண்டும் என்றும் வடிவாய்க்கால்களான வெள்ளவாய்க்கால் மற்றும் கோனேரிவாய்க்கால் ஆகியவற்றின் ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூர்வாரிகொடுக்கவேண்டும் என்று விவசயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu