ஆலங்குடி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரைகளை நிரந்தரமாக பலப்படுத்த நடவடிக்கை
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் மாவட்ட கண்காணிப்பு சிறப்பு அதிகாரி ஹித்தேஷ் குமார் மக்வானா
மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு சிறப்பு அதிகாரி ஹித்தேஷ் குமார் மக்வானா நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு கண்காணிப்பு அதிகாரி, மாவட்டத்தில் வெள்ள நிலைமை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், 2005 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஆலங்குடி என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பு கருங்கல் கொண்டு சரி செய்யப்பட்டதாகவும், அதனை நிரந்தரமாக சரி செய்யும் திட்டம் தயார் செய்து அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.
மேலும் மாவட்டத்தில் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும் ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் வடிந்து வருவதால் வெள்ள பாதிப்பு நிலைமை விரைவில் சீரடையும் என்றும், அதேநேரம் மாவட்டத்தில் உள்ள 700 குளங்களில் 25 சதவீதம் மட்டுமே முழுமையாக நிரம்பி உள்ளதாகவும், தண்ணீர் வரும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீரை நீர்நிலைகளில் சேகரிக்க மாவட்ட ஆட்சியருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா உடனிருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu