2வது நாளாக வேலைநிறுத்தம்: மயிலாடுதுறையில் 70% பேருந்துகள் இயக்கம்

2வது நாளாக வேலைநிறுத்தம்: மயிலாடுதுறையில் 70% பேருந்துகள் இயக்கம்
X

மயிலாடுதுறையில் வழக்கம் போல் இயங்கிய பேருந்துகள். 

தொழிற்சங்கங்கள் 2 நாளாக பொது வேலைநிறுத்தம் நடக்கும் சூழலில், மயிலாடுதுறையில் 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று இரண்டாவது நாளாக பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், எல்ஐசி உள்ளிட்ட பொது நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என்றும், பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பொறையாறு அரசு போக்குவரத்து பணிமனையில் 155 பேருந்துகளில் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றனர். பேருந்துகள் இயக்கப்படுவதால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர், எந்தவித பிரச்சினையும் இன்றி பயணம் செய்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாய சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Tags

Next Story