குத்தாலம் அருகே பேராவூர் ஸ்ரீ ஐயனார் கோயிலின் பூட்டை உடைத்து திருட்டு

குத்தாலம் அருகே பேராவூர் ஸ்ரீ ஐயனார் கோயிலின் பூட்டை உடைத்து திருட்டு
X

திருட்டு நடந்த அய்யனார் கோவில்.

மயிலாடுதுறை அருகே குத்தாலம் அருகே பேராவூர் ஸ்ரீ ஐயனார் கோயிலின் பூட்டை உடைத்து தங்க தாலி மற்றும் பணம் திருட்டு போனது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பேராவூரில் ஸ்ரீ அய்யனார் கோவில் உள்ளது. 25 ஆம் தேதி இரவு இந்த கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அய்யனார் சிலை அருகில் உள்ள சாமி பூர்ணா, புஷ்கலா சிலையில் இருந்த 4 கிராம் மதிப்பிலான 3 தாலிகள், பித்தளை அண்டா, கோயில் மணிகள், உண்டியல் பணம் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து இன்று கோயில் நிர்வாகத்தினர் பாலையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கிராம கோயிலில் திருடப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!