சீர்காழி அருகே கரி ஏற்றி வந்த டிராக்டர் மோதி செவிலியர் உயிரிழப்பு

சீர்காழி அருகே கரி ஏற்றி வந்த டிராக்டர் மோதி செவிலியர் உயிரிழப்பு
X
சீர்காழி அருகே கரி ஏற்றி வந்த டிராக்டர் மோதி செவிலியர் உயிரிழப்பு 15 வயது சிறுவன் டிராக்டரை ஒட்டி விபத்தை ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சீர்காழி அருகே வடகால் துணை சுகாதார நிலையத்தில் செவிலியராக பணி புரிபவர் செவிலியர் உஷா இவர் இன்று குளத்திங்கநல்லூருக்கு பணி நிமித்தமாக மாதாந்திர தடுப்பூசி போடுவதற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்பொழுது அவருக்குப் பின்னே கரி ஏற்றி வந்த டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது மோதி அவர் மீது ஏறி இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் செவிலியர் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற புதுபட்டினம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் டிராக்டரை 15 வயது சிறுவன் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!