படகு கவிழ்ந்து மீனவர் பலி

படகு கவிழ்ந்து மீனவர் பலி
X
பழையாறு அருகே, மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து மீனவர் பலி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, பழையாறு சுனாமி நகரை சேர்ந்தவர் நடராஜன், வயது 44. இவர் இன்று காலை துறைமுகத்தில் இருந்து பைபர் படகு ஒன்றில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

ஒன்றரை நாட்டிகல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்தது. இதில் கடலில் விழுந்த நடராஜன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

சக மீனவர்கள் நடராஜனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தகவலறிந்த கடலோர காவல் படை போலீசார் விரைந்து வந்து நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!