மயிலாடுதுறையில் தி.மு.க.வை கண்டித்து பா.ஜ.க.வினர் போராட்டம்

மயிலாடுதுறையில் தி.மு.க.வை கண்டித்து பா.ஜ.க.வினர் போராட்டம்
X

மயிலாடுதுறையில் தி.மு.க.வை கண்டித்து பா.ஜ.க.வினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறையில் தி.மு.க தகவல் தொழில் நுட்ப பிரிவை கண்டித்து பா.ஜ.க.வினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கல்லரை தோப்பு தெருவில் பா.ஜ.க.வினர் பா.ஜ.க.வினரின் கருத்துரிமையை பாதிக்கும் வகையில், செயல்படும் தி.மு.க. அரசையும், தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணியினரையும் கண்டித்து, வாயில் கருப்பு துணிகட்டி, மௌன. போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு பா.ஜ.க. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநில ஓ.பி.சி. அணி துணை தலைவர் அகோரம் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டு தி.மு.க.வை கண்டிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!