மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது
X

மயிலாடுதுறையில் போலீஸ் தடையை மீறி பா.ஜ.க.வினர் மாட்டு வண்டி பேரணி நடத்தினர்.

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில், பா.ஜ.க.வினர், பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க கோரி மாட்டுவண்டி பேரணி தொடங்கினர். பேரணிக்கு மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார். பேரணியில் கலந்துகொண்ட பா.ஜ.க. மாநில செயலாளர் தங்க.வரதராஜன் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து முழுக்கமிட்டு பேரணியில் கலந்துகொண்டார்.

ஆனால், மாட்டுவண்டி பேரணிக்கு அனுமதி இல்லை மீறி நடத்தினால் கைது செய்வோம் என ோலீசார் பேரணியை தடுத்து நிறுத்தியதால், மணல்மேடு பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 100 பேர் கைது செய்யபட்டனர்

Tags

Next Story
future goals of ai