திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஆசி பெற்றபாஜக தலைவர் அண்ணாமலை

திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஆசி பெற்றபாஜக தலைவர் அண்ணாமலை
X

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.

பாஜக தலைவர் அண்ணாமலை திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தார். அப்போது இந்தியாவின் தொன்மை மிக்க ஆதீனங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்ற அண்ணாமலை, அங்கு திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அருள் ஆசி பெற்றார். அவருக்கு குருமகாசன்னி தானம் நினைவு பரிசினை வழங்கினார். அப்போது கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்