மயிலாடுதுறையில் தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பைகளை அகற்றிய பா.ஜ.க.

மயிலாடுதுறையில் தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பைகளை அகற்றிய  பா.ஜ.க.
X

மயிலாடுதுறையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பா.ஜ.க.வினர் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்தனர்.

மயிலாடுதுறையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பா.ஜ.க. வினர் குப்பைகளை அகற்றி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மயிலாடுதுறை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகில் அதிக அளவில் மரக்கிளைகள், குப்பைகள் ஆகியன பல மாதங்களாக குவித்து வைக்கப்பட்டுக் கிடந்தது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றாததால் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பா.ஜ.க. நகரத் தலைவரும், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளருமான மோடி.கண்ணன் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகளே அவற்றை அகற்றினர்.

மலைபோன்று தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றி டிராக்டரில் ஏற்றி நகராட்சி குப்பைக் கிடங்குக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அம்பேத்கர் சிலையை சுத்தப்படுத்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
ai in future agriculture