மயிலாடுதுறையில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்படுவதை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில்  தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்படுவதை கண்டித்து பாஜக  ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்படுவதை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவது கண்டித்து, சாலையில் ரேஷன் அரிசியை கொட்டி பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

கொரோனா நிவாரணமாக ரேஷன் கடைகளில் மத்திய அரசு அறிவித்துள்ள இலவச அரிசியை முழுமையாக வழங்க கோரியும் ரேஷன் கடையில் தரமில்லாமல் அரிசி வழங்கப்படுவது கண்டித்து சாலையில் ரேஷன் அரிசியை கொட்டி பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஊரடங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 20 கிலோ அரிசி வழங்க மத்திய ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த நிவாரணங்களை பல்வேறு மாவட்டகளில் முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது. இதற்கு காரணமான தமிழக அரசை கண்டித்தும், மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமில்லாமல் அரிசி வழங்கப்படுவதை கண்டித்தும் ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி பிஜேபியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story