மயிலாடுதுறையில் தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெட்ரோல்,டீசல் மீதான வாட் வரி குறைக்காத தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காததை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பட்டியல் அணி மாவட்ட தலைவர் ஈழவேந்தன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் வெங்கடேசன், மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவிசேதுராமன், நகரத் தலைவர் கண்ணன், மாவட்ட துணைபொதுசெயலாளர் செந்தில் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நகரத் தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!