மயிலாடுதுறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க வேட்பாளர்கள் மனு தாக்கல்

மயிலாடுதுறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க வேட்பாளர்கள் மனு தாக்கல்
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று நிர்வாகிகளுடன் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் குத்தாலம் கணேசன் தலைமையில் மாநில இளைஞரணி துணை தலைவர் விமல், தொகுதி தலைவர் சந்தானம், சமூக நீதிப் பேரவை செயலாளர் வழக்கறிஞர் பாரி, பேரூர் செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் குத்தாலம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் நீதி பாஸ்கர், சுகன்யா சுரேஷ், மகேஷ், துரை மகேஷ், ராமகிருஷ்ண அய்யர் உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மகேஷ் மற்றும் பரந்தாமனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் பா.ம.க. நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!